/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரவில் மின் வெட்டு வியாசர்பாடியில் சாலை மறியல்
/
இரவில் மின் வெட்டு வியாசர்பாடியில் சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2025 12:20 AM
வியாசர்பாடி: வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், பி.வி.காலனி, தேசிகானந்தபுரம், சாஸ்திரி நகர், சஞ்சய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சில மாதங்களாக, தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை மின் வெட்டு ஏற்பட்டதால், முதியோர், குழந்தைகள் துாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், சிட்கோ பிரதான சாலையில் உள்ள மின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் கல்லுக்குட்டை பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.கே.பி., நகர் போலீசார், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் வந்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.