/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டி 8 சவரன் பறித்த 9 பேர் கைது
/
டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டி 8 சவரன் பறித்த 9 பேர் கைது
டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டி 8 சவரன் பறித்த 9 பேர் கைது
டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டி 8 சவரன் பறித்த 9 பேர் கைது
ADDED : பிப் 18, 2025 12:11 AM
குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ், 40. சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி, ராஜேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற மர்ம கும்பல், ராஜேஷை தாக்கி, கத்தியால் அவரது கையில் வெட்டி, 8 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.
ராஜேஷ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து, சோமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் டிராவல்ஸ் மேலாளராக பணியாற்றும் கோட்டீஸ்வரன், 40, அவரது டிரைவர் சேதுபதி, 28, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இதில், வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் என நினைத்த கோட்டீஸ்வரன், அதுகுறித்து தன் நண்பர்களுடன் விவாதித்துள்ளார்.
அப்போது, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நண்பர் பாஸ்கர், 40, என்பவர், மலைப்பட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் வீட்டில் கொள்ளை அடிக்கலாம் என, யோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து, திருநெல்வேலியைச் சேர்ந்த சவுந்தரபாண்டி, 26, என்பவர் வாயிலாக ஆட்களை ஏற்பாடு செய்து, ராஜேஷ் வீட்டில் புகுந்து திருட முயன்றனர். ஆனால், அங்கு அவர்கள் எதிர்பார்த்த பணம், நகை இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, ராஜேஷை வெட்டி, அவரிடம் இருந்த 8 சவரன் நகையை பறித்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, கோட்டீஸ்வரன், சவுந்தரபாண்டி, பாஸ்கர், சேதுபதி, பிச்சைகண்ணு, 24, நம்பி, 20, நல்லக்கண்ணு, 25, சரவணன், 28, பெருமாள், 47, ஆகிய ஒன்பது பேரை, சோமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.