தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஜீரோ பி.ஜே.பி.,' இயக்கத்தை துவக்கினார் நிர்மலா சீதாரமன் கணவர்

 'ஜீரோ பி.ஜே.பி.,' இயக்கத்தை துவக்கினார் நிர்மலா சீதாரமன் கணவர்

 'ஜீரோ பி.ஜே.பி.,' இயக்கத்தை துவக்கினார் நிர்மலா சீதாரமன் கணவர்


ADDED : ஏப் 09, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் உள்ளிட்டோர் இணைந்து, பா.ஜ.,வுக்கு எதிராக, 'ஜீரோ பி.ஜே.பி.,' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், 27 தொகுதிகளிலும் பா.ஜ.,வை தோற்கடிக்க, 'ஜீரோ பி.ஜே.பி.,' என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் கணவர் பரகலா பிரபாகர், முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோர், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

'ஜீரோ பி.ஜே.பி.,' முயற்சி என்பது மிகவும் முக்கியமானது. இந்த முயற்சிக்கு துணை நிற்கவே சென்னை வந்துள்ளேன். மதம், மொழி, மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பன்முகத்தன்மையை பாதுகாக்க, பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டும்.

மக்கள் என்ன சாப்பிட வேண்டும்; என்ன உடை உடுத்த வேண்டும்; எந்த மொழியில் பேச வேண்டும்; எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை, டில்லியிலிருந்து பா.ஜ., தீர்மானிக்கிறது. இதனால், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாசாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக சட்டசபையில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இருக்கக்கூடாது. அதாவது, 'ஜீரோ பி.ஜே.பி.,' ஆக இருக்க வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை மட்டுமல்ல, தேர்தல் கமிஷனையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது. தமிழக மக்கள் விழிப்புடன் இருந்து, பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் தமிழக சட்டசபையில் நுழையாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us