/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தவர்களை வியக்க வைத்த நித்யாவின் நாட்டிய அரங்கேற்றம்
/
பார்த்தவர்களை வியக்க வைத்த நித்யாவின் நாட்டிய அரங்கேற்றம்
பார்த்தவர்களை வியக்க வைத்த நித்யாவின் நாட்டிய அரங்கேற்றம்
பார்த்தவர்களை வியக்க வைத்த நித்யாவின் நாட்டிய அரங்கேற்றம்
ADDED : பிப் 04, 2024 02:16 AM

சென்னை,:பாரதி பதிப்பகத்தின் நிறுவனர் சிதம்பரம் மற்றும் மெய்யம்மையின் பேத்தியும், ஸ்ரீ சாய் பாரதி பதிப்பகத்தின் நிறுவனர் வித்யானந்தன் - சிகப்பி தம்பதியின் மகள் நித்யா மெய்யம்மையின் பரதநாட்டிய அரங்கேற்றம், ராணி சீதை ஹாலில் நேற்று நடந்தது.
நாட்டியக்கடவுள் நடராஜருக்கு பூக்கள் அர்ப்பணம் செய்து, நடனம் கற்றுக் கொடுத்த குரு மற்றும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்களுக்கு முதல் வணக்கத்துடன், அரங்கேற்றத்தை துவக்கினார்.
'ஹம்சத்வனி' ராகத்தில் அமைந்த 'ஆனந்த தாண்டவ கணபதி ஓம்' எனும் பாடலுக்கு, கணபதியின் சிறப்புகளை விவரிக்கும் வகையில் ஆடினார்.
அலாரிப்பு நடன வடிவத்தில், பதாகம் முத்திரையுடன் நேர்த்தியாக ஆடினார்.
தொடர்ந்து, விஷ்ணுவை போற்றும் வகையில் ஆண்டாள் கூத்துவம், முருகன் வள்ளியை வர்ணித்து 'சப்தம் தண்டை முழங்க' ஆடினார். சிவன் மற்றும் கிருஷ்ணனை குறித்து பாடும் பாடலுக்கும் ஆடினார்.
தொடர்ந்து, ராமாயணத்தைக் கொண்டு ஒன்பது நவரச பாவத்தை விளக்கி ஆடியது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. முடிவில், குறத்தி மற்றும் தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.
'நவரச கேந்திரா' நடனப் பள்ளியின் இயக்குனரும், கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் சிஷ்யையுமான சித்ராவிடம், நித்யா மெய்யம்மை, நான்கு ஆண்டுகளாக பரதம் கற்று வருகிறார்.