/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் வேண்டாம் 12வது முறை தீர்மானம்
/
ஏர்போர்ட் வேண்டாம் 12வது முறை தீர்மானம்
ADDED : மார் 30, 2025 12:11 AM
காஞ்சிபுரம், உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தின் பற்றாளராக ஹரிதாஸ் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரந்துார் விமான நிலையத்தால் பறிபோகும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஏகனாபுரம் ஊராட்சி செயலர், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 12வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.