/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்கு கருணை காட்ட முடியாது
/
சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்கு கருணை காட்ட முடியாது
சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்கு கருணை காட்ட முடியாது
சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்கு கருணை காட்ட முடியாது
ADDED : ஜன 31, 2025 12:17 AM
8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
சென்னை, சென்னை, ஐ.சி.எப்., கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இம்மானுவேல், 24.
சிறையில் இருந்து வெளியே வந்து, அப்பகுதியில் உள்ள குடிசைகளுக்கு, மின் வசதி செய்து கொடுத்து, பணம் வசூலித்துள்ளார்.
இதை தட்டிக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த அம்மு, 25, என்பவரை, இம்மானுவேல் ஆபாச வார்த்தைகளால் திட்டிஉள்ளார்.
இந்நிலையில், 2013 ஏப்., 15ல், ஐ.சி.எப்., காந்தி நகர் குடிசை மாற்று வாரிய பகுதியில், தன் தாயுடன், இம்மானுவேல் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அம்முவின் தம்பி அப்பு என்ற தளபதி, 23, அவரது நண்பர்கள் சேர்ந்து, இம்மானுவேலை கத்தியால் வெட்டி, அருகிலிருந்த 'கிரைண்டர்' கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.சி.எப்., போலீசார், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அப்பு, 23, ரஞ்சித், 23, செல்வா, 23, வினோத், 23, இளையா, 23, காட்டுராஜா, 22, அப்பன்ராஜ், 22, அம்மு, 25, உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.
வழக்கில் கைதான சிறார் மீதான வழக்கு மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மீதமுள்ள எட்டு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட 18வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன் நடந்து வந்தது. போலீசார் சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் கைதான அம்முவிடம், இறந்த இம்மானுவேல் தகாத முறையில் நடந்தது தான் கொலைக்கு காரணம். நம் நாட்டில் பெண்களை பாதுகாக்க, பல சட்டங்கள் உள்ளன.
இருப்பினும், அந்த சட்டங்களின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மற்ற எதிரிகளோடு சேர்ந்து, இம்மானுவேலை கொலை செய்ய, அம்மு உடந்தையாக இருந்துள்ளார். இதனால்அவருக்கு கருணை காட்ட தேவையில்லை.
தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு சட்ட நடவடிக்கையை எடுக்காமல், சட்டத்தை மதிக்காமல், கொடூரமான முறையில், சகோதரருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
வழக்கில் கைதான எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதமாக மொத்தம் 60,000 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
மகனை இழந்த தாய்க்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

