/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் இனி மல்லுக்கட்ட தேவையில்லை முதியவர்களுக்கு சிறப்பு பாஸ் வசதி துவக்கம்
/
ஏர்போர்ட்டில் இனி மல்லுக்கட்ட தேவையில்லை முதியவர்களுக்கு சிறப்பு பாஸ் வசதி துவக்கம்
ஏர்போர்ட்டில் இனி மல்லுக்கட்ட தேவையில்லை முதியவர்களுக்கு சிறப்பு பாஸ் வசதி துவக்கம்
ஏர்போர்ட்டில் இனி மல்லுக்கட்ட தேவையில்லை முதியவர்களுக்கு சிறப்பு பாஸ் வசதி துவக்கம்
ADDED : நவ 21, 2025 04:12 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கர்ப்பிணியர், முதியவர்களை கார்களில் அனைத்து முனையங்களின் வெளியே வரை வந்து ஏற்றி செல்வதற்கான பாஸ் வசதியை, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் மூன்று முனையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த முனையங்களில் பயணியர் சொந்த அல்லது வாடகை கார்களில் வந்து செல்ல முடியும்.
இதுவே, வருகை முனையங்களில் சொந்த வாகனங்கள் வந்து செல்ல அனுமதி கிடையாது. கர்ப்பிணியர், முதியவர்களை அழைத்து செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், பணியில் உள்ள பார்க்கிங் பராமரிக்கும் ஊழியர்கள், சில கார்களை தடுத்து உள்ளே அனுமதிக்க மறுத்து வந்தனர். இதில் கடுப்பான பயணியர் பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக ஆத்திரத்தை கொட்டி தீர்த்தனர். மூன்று மாதங்களாக அடுக்கடுக்கான புகார்கள் வந்ததாலும், இவற்றுக்கு தீர்வு காணப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கர்ப்பிணியர் மற்றும் முதியவர்களை அழைத்து செல்ல வரும் கார்களுக்கு சிறப்பு அனுமதி பாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவுவாயிலில் உள்ள சுங்கத்துறை ஊழியர்களிடம், பயணியர் விபரங்களை காண்பித்து, இந்த பாஸ் பெறலாம்.
இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய வருகை முனையங்களில், பயணியரை கார்களில் ஏற்றி செல்ல அனுமதி கிடையாது. இதுவே முதியவர்கள், கர்ப்பிணியர், மருத்துவ உதவி தேவைப்படுவோர் வருகை முனையம் வரை வந்து ஏற்றி செல்ல அனுமதித்தோம்.
ஆனாலும், அனுமதி மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. விமான நிலைய இயக்குநர் தலைமையில் ஆலோசித்து, பாஸ் முறையை ஏற்பாடு செய்துள்ளோம். பயணியரின் முக்கியத்துவம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் கார்களுக்கு 10 நிமிடங்கள் வரை எந்த கட்டணமும் இல்லாமல் வந்து செல்லலாம்; இந்த பாஸ் பெற்று வருபவர்களுக்கு, 15 நிமிடங்கள் இலவச நேரம் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

