/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3.82 லட்சம் சதுர அடி இடங்களுக்கு பட்டா வழங்க தடையின்மை சான்று
/
3.82 லட்சம் சதுர அடி இடங்களுக்கு பட்டா வழங்க தடையின்மை சான்று
3.82 லட்சம் சதுர அடி இடங்களுக்கு பட்டா வழங்க தடையின்மை சான்று
3.82 லட்சம் சதுர அடி இடங்களுக்கு பட்டா வழங்க தடையின்மை சான்று
ADDED : ஜூன் 18, 2025 12:16 AM
சென்னை, சென்னை மாநகராட்சி எல்லையில், அரசு புறம்போக்கு இடங்களில் பத்து ஆண்டுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ளதையடுத்து, 3.82 லட்சம் சதுர அடி இடத்திற்கு, சென்னை மாநகராட்சி தடையின்மை சாற்று வழங்கியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, ஒருமுறை வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ், வீட்டுமனை பட்டா வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லையில், வண்டிப்பாட்டை, களம், மயானம் உள்ளிட்ட வகைப்பாடு கொண்ட இடங்களில், பலர் வசிப்பது தெரிந்தது.
ஒவ்வொரு சர்வே எண்ணிலும், பல ஏக்கர் இடங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க, வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, சென்னை மாநகராட்சியிடம் தடையின்மை சான்று கேட்டு, சென்னை கலெக்டர் கடிதம் எழுதினார். மாநகராட்சியின் நிலம் மற்றும் உடைமைத்துறை மற்றும் அந்தந்த தாலுகா வாயிலாக, இடங்கள் அடையாளம் காணப்பட்டு அளவீடு செய்யப்பட்டது.
அதன்படி, 65 இடங்களில் அடையாளம் காணப்பட்ட 95 சர்வே எண்களில், 3.82 லட்சம் சதுர அடி இடத்தில் வீடு கட்டி வசிப்போருக்கு, பட்டா வழங்க தடையில்லை என, மாநகராட்சி சான்று வழங்க முடிவு செய்தது.
இதை, நிலைக்குழுவில் அனுமதி பெற்று, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 95 சர்வே எண்களில் உள்ள கோப்புகளை தயார் செய்து, பட்டா வழங்க தடையில்லை என, சென்னை கலெக்டருக்கு தடையின்மை சான்று அனுப்பப்பட்டு உள்ளது.