sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடசென்னை வளர்ச்சி திட்ட நிதி ரூ.1,000 கோடி... என்னாச்சு? பணி விபரம் கேட்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி

/

வடசென்னை வளர்ச்சி திட்ட நிதி ரூ.1,000 கோடி... என்னாச்சு? பணி விபரம் கேட்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி

வடசென்னை வளர்ச்சி திட்ட நிதி ரூ.1,000 கோடி... என்னாச்சு? பணி விபரம் கேட்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி

வடசென்னை வளர்ச்சி திட்ட நிதி ரூ.1,000 கோடி... என்னாச்சு? பணி விபரம் கேட்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி


ADDED : பிப் 01, 2024 12:03 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, :'வடசென்னை பகுதியில், 1,000 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். ஆனால், வடசென்னையில் என்ன வளர்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது, அதற்காக விடப்பட்ட ஒப்பந்தங்கள் போன்ற எந்த தகவலும் தெரியவில்லை' என, ரிப்பன் மாளிகையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், மண்டல குழு தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அதில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

34 தீர்மானம்


 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தில் பணியாற்றுவோருக்கு ஒரு நாள் ஊதியம், 522 ரூபாயில் இருந்து 687 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இவற்றால், 4,469 பேர் பயன் பெறுகின்றனர்

 சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளி சுற்றுப்புறங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளை துாய்மைப்படுத்த 110 பணியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட உள்ளனர்

 மாநகராட்சி மத்திய கணக்கு குழுமம் சார்பில், 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் மிகை ஊதியத்தால், மாநகராட்சிக்கு 2023 - 24ம் ஆண்டில், கூடுதல் செலவினமாக 70 லட்சம் ரூபாய் ஆகிறது

 மெரினா லுாப் சாலையில் உள்ள மீன் அங்காடிக்கு சுற்றுச்சுவர், காவலர் அறை உள்ளிட்ட பணிகளுக்கு 4.96 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கவுன்சில் கூட்டத்தில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:

வடசென்னை வளர்ச்சி நிதியில், எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கேட்டால், வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்யப்படும் என்கின்றனர்.

ஆனால், வடசென்னையில் என்ன வளர்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதற்காக விடப்பட்ட ஒப்பந்தங்கள் போன்ற எந்த தகவலும் தெரியவில்லை.

இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

வளர்ச்சி பணி


இதற்கு, மாநகராட்சி மேயர் பிரியா அளித்த பதில்:

வடசென்னை வளர்ச்சி நிதி 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, குடிநீர், சாலை, பூங்கா, மருத்துவம் என அனைத்து துறைகளுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., ஆய்வுக் கூட்டத்தில் விபரங்கள் பெற்று, என்னென்ன பணிகள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் பேசியதாவது:

'அம்மா' உணவகங்களில் பணியாற்றுவோருக்கு தினசரி 300 ரூபாயாக வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், தவறு செய்யும் அம்மா உணவக பணியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், பெரிய கட்டுமான நிறுவனங்களில் சமூக பங்களிப்பு நிதியை அந்தந்த பகுதியைச் சேர்ந்த பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ''தவறு செய்யும் அம்மா உணவக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சமூக பங்களிப்பு நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படும்,'' என்றார்.

தொடர்ந்து, திருவள்ளுவர் உருவப் படத்தை வரைந்த வேணுகோபால் சர்மா பெயரை, அவர் வாழ்ந்த பெசன்ட் சாலை அல்லது திருவல்லிக்கேணி பிரதான சாலைக்கு சூட்ட வேண்டும்.

'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் விடுபட்டோருக்கு 6,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

அண்ணா நகரில் குப்பை

வி.சி., கவுன்சிலர் கிரண் ஷர்மிலி பேசியதாவது:

அண்ணா நகர் மண்டலத்தில், துாய்மை பணியாளர்கள் அனைவரும் நிரந்தர அடிப்படையில் உள்ளனர். அவர்கள் யாரும் குப்பையை சரிவர அகற்றுவதில்லை. பணி செய்ய சொன்னால், 'விடுமுறை வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளுங்கள்' என்கின்றனர்.

எனவே, நிரந்தர பணியாளர்களை மற்ற மண்டலங்களுக்கு பிரித்துக் கொடுத்து, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ''அண்ணா நகர் மண்டலத்தில் குப்பை சரியாக எடுக்காததை ஆய்வின் போது நானும் பார்த்தேன். விரைவில், குப்பை கையாளும் பணியை தனியாரிடம் விட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

எழுத்துப்பூர்வ கடிதம் அளிக்கலாம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், தங்கள் பகுதி கோரிக்கை மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, கவுன்சிலர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிக்கலாம். அதன் வாயிலாக, அத்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

- - ஜெ.ராதாகிருஷ்ணன்,

கமிஷனர் சென்னை மாநகராட்சி

வரி ஏய்ப்பு குறித்து

விசாரிக்க வலியுறுத்தல்கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், ஒன்பது நட்சத்திர ஹோட்டல்களில், 50 சதவீதத்திற்கும் மேல் சொத்து வரி குறைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மீது புகார் கூறி, ஒன்பது மாதங்களாகும் நிலையில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், ''நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமின்றி, தனியார் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் ஆகியவற்றிலும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.இதற்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன், ''சொத்து வரி மாநகராட்சிக்கு முக்கிய வரி வருவாய். இந்த வரி ஏய்ப்பு குளறுபடி குறித்து, முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படும்,'' என பதில் அளித்தார்.



அண்ணா நகரில் குப்பை

வி.சி., கவுன்சிலர் கிரண் ஷர்மிலி பேசியதாவது:அண்ணா நகர் மண்டலத்தில், துாய்மை பணியாளர்கள் அனைவரும் நிரந்தர அடிப்படையில் உள்ளனர். அவர்கள் யாரும் குப்பையை சரிவர அகற்றுவதில்லை. பணி செய்ய சொன்னால், 'விடுமுறை வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளுங்கள்' என்கின்றனர். எனவே, நிரந்தர பணியாளர்களை மற்ற மண்டலங்களுக்கு பிரித்துக் கொடுத்து, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ''அண்ணா நகர் மண்டலத்தில் குப்பை சரியாக எடுக்காததை ஆய்வின் போது நானும் பார்த்தேன். விரைவில், குப்பை கையாளும் பணியை தனியாரிடம் விட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us