ADDED : ஏப் 08, 2025 11:58 PM
அ நிறம் | அளவு
கொடுங்கையூர், கொடுங்கையூர், காமராஜர் சாலையில் உள்ள ராகேஷ் திருமண மண்டபத்தில் தங்கி, வடமாநிலத்தை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இங்கு, நேற்று பணியில் இருந்த மேற்கு வங்காளம், பங்குரா பகுதியை சேர்ந்த சாகிப், 29, என்பவரை, மர்ம நபர் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.
இதில் காயமடைந்த சாகிப்பை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
