/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தகர 'சீட்' கொட்டைகையில் தங்குமிடம் 'வெந்து' தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
/
தகர 'சீட்' கொட்டைகையில் தங்குமிடம் 'வெந்து' தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
தகர 'சீட்' கொட்டைகையில் தங்குமிடம் 'வெந்து' தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
தகர 'சீட்' கொட்டைகையில் தங்குமிடம் 'வெந்து' தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : ஏப் 09, 2025 12:16 AM

குன்றத்துார்,குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியங்களில், 100 ஊராட்சிகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில், சிப்காட் தொழிற் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு, 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதேபோல், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மேலும், புறநகரின் பல இடங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள், தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
குறைந்த ஊதியத்திற்கு பணிக்கு வருவதால், ஆட்களை பணிக்கு அனுப்பும் நிறுவனங்கள் வாயிலாக, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியில், அதிக அளவில் வடமாநில தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கட்டுமான பணி தளத்தில், தகர சீட்டால் அமைக்கப்பட்ட கொட்டகையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.
தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும், சிறிய இடத்தில் அதிகம் பேர் தங்க வைக்கப்படுகின்றனர்.
பகலில் கடும் வெப்பத்தில் பணியாற்றும் அவர்கள், இரவு நேரத்தில் காற்றோட்டம் இல்லாத அனல் பறக்கும் சிறிய இடத்தில் உறங்குவதால், வடமாநில தொழிலாளர்கள் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்படு ஏற்படுகிறது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும், வெப்பவாதத்தால் இவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
எனவே, வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்படும் இடத்தில், அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

