/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டடம் இடிந்த விபத்து உரிமையாளருக்கு 'நோட்டீஸ்'
/
கட்டடம் இடிந்த விபத்து உரிமையாளருக்கு 'நோட்டீஸ்'
கட்டடம் இடிந்த விபத்து உரிமையாளருக்கு 'நோட்டீஸ்'
கட்டடம் இடிந்த விபத்து உரிமையாளருக்கு 'நோட்டீஸ்'
ADDED : டிச 04, 2025 02:11 AM
ஓட்டேரி: பழைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்து மூவர் காயமடைந்த விபத்தில், கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக, ஓட்டேரி, தர்கா தெரு மற்றும் ஸ்டிராஹன்ஸ் சாலை சந்திப்பில் பிரியாணி மற்றும் டிபன் கடையின் கூரை, நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.
இதில் பிரியாணி கடைக்காரரான புளியந்தோப்பைச் சேர்ந்த அபிஸ், 38, டிபன் கடைக்காரரான ஓட்டேரியைச் சேர்ந்த அயூப்கான், 40, மற்றும் இவரது மனைவி சரிபா பானு, 39, ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆபத்தான கட்டடத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர்களான, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இதயதுல்லா, 44, ஓட்டேரியைச் சேர்ந்த இலியாஸ், 36, மற்றும் ஜலால் 63 ,ஆகியோருக்கு, மாநகராட்சி சார்பில் நேற்று 'நோட்டீஸ்' தரப்பட்டுள்ளது.
இடிந்த கட்டடத்தில், 10 கடைகள் மற்றும் மூன்று வீடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. கட்டடத்தில் இருந்தவர்கள், அனைவரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

