/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக கட்டணம் வசூல் பள்ளிக்கு 'நோட்டீஸ்'
/
அதிக கட்டணம் வசூல் பள்ளிக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 06, 2025 12:28 AM
சென்னை, சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களிடம், நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, தனியார் பள்ளிகளுக்கான, சென்னை எழும்பூர் மாவட்ட கல்வி அலுவலரிடம், பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரில், 'தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவால், 32,670 ரூபாய் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 57,000 ரூபாய் கல்விக் கட்டணம், 10,000 ரூபாய் சேர்க்கை கட்டணம் என, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளியின் தாளாளர், உரிய ஆவணங்களுடன் தன்னிலை விளக்கம் அளிக்கும்படி, மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்காவிட்டால், தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்து சட்டம் - 2023ன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.