ADDED : ஜூலை 14, 2025 02:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், பெரியார் நகர் பிரதான சந்திப்பில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலம் வரை, 400 மீ., துாரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
கட்டுமான பணி நடக்காத நிலையில், கால்வாயின் ஒரு பகுதியில், சுண்ணாம்பு கோணிகளை சிலர் அலசி செல்கின்றனர். இதனால், அந்த தண்ணீர் முழுதும் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, இத்தண்ணீரில் ஆனந்த குளியல் போட்ட எருமைகள் மீது சாயம் ஒட்டியுள்ளது. இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இடம்: திருவொற்றியூர்.

