/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்
/
என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்
என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்
என்.டி.இ.சி.எல்., நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ் ஒப்பந்தம்
ADDED : நவ 28, 2025 05:21 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், மத்திய அரசின் என்.டி.பி.சி., எனும் தேசிய அனல் மின் கழகமும், தமிழக மின் வாரியமும் இணைந்து, என்.டி.இ.சி.எல்., பெயரில் கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளன.
மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், என்.டி.இ.சி.எல்., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் என்.டி.இ.சி.எல்., நிர்வாக இயக்குநர் சஞ்சய் குமார் சின்ஹா, பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மைய தொழில்நுட்ப நிறுவன முதன்மை இயக்குநர் இளங்கோவன் கையெழுத்திட்டனர்.
இ தன் வாயிலாக, என்.டி.இ.சி.எல்., நிறுவனம், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்கு உதவ உள்ளது. அதன்படி, 90 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கிடைக்கும். பாலிமர் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.