/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் பிரச்னை வரலாம் தீர்வுக்கு எண் வெளியீடு
/
கழிவுநீர் பிரச்னை வரலாம் தீர்வுக்கு எண் வெளியீடு
ADDED : ஜன 27, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தண்டையார்பேட்டை மண்டலம், எம்.கே.பி., நகரில் கழிவுநீர் உந்து குழாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இன்றும், நாளையும், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
இந்த மூன்று மண்டலங்களிலும், இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறினால், லாரிகளில் வெளியேற்றப்படும். இதற்கு, தண்டையார்பேட்டை - 81449 30904, திரு.வி.க.நகர் - 81449 30906, அண்ணாநகர் - 81449 30908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் கூறினர்.

