/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிக்கப்பட்ட குளக்கரை மீட்பு
/
ஆக்கிரமிக்கப்பட்ட குளக்கரை மீட்பு
ADDED : நவ 13, 2024 02:33 AM

கொளத்துார்:கொளத்துார் ஜி.கே.எம்.காலனி 25வது தெருவில் முத்துமாரியம்மன் திருக்கோவில் குளத்தின் கரை அருகே, எட்டு வீடுகள் உள்ளன.
இங்கு 43 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசித்து வரும் வீட்டின் வெளியே குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து 'பார்க்கிங்' மற்றும் நிழற்குடை உள்ளிட்டவை அமைத்திருந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியும், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இந்நிலையில் சென்னை திரு.வி.க., நகர் மண்டல அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று, குளத்தின் கரையை ஆக்கிரமித்து இருந்த இடத்தை,'பொக்லைன்' வாயிலாக இடித்து அகற்றினர்.
இதனால், குளத்திற்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது.

