/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கூடைப்பந்து போட்டி ஓசியானிக் அணி வெற்றி
/
மாநில கூடைப்பந்து போட்டி ஓசியானிக் அணி வெற்றி
ADDED : ஏப் 28, 2025 02:43 AM

சென்னை:சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், இந்தியன் வங்கி ஆதரவுடன், மாநில கூடைப்பந்து போட்டிகள், கடந்த 25ம் தேதி, நேரு மைதானத்தில் துவங்கின.
இருபாலருக்குமான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 72 அணிகள், பெண்கள் பிரிவில் 32 அணிகள் பங்கேற்று, விளையாடி வருகின்றன.
இதில், நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான போட்டியில், ஓசியானிக் அணியை எதிர்த்து, நெக்சஸ் அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில், ஓசியானிக் அணி வீராங்கனையர் வசமே பந்து இருந்தது. அந்த அணியின் ஆதியா, நந்தினி இருவரும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆதியா 18 புள்ளிகளும், நந்தினி 14 புள்ளிகளும் எடுக்க, ஆட்ட நேர முடிவில் 53 - 31 என்ற புள்ளிக்கணக்கில், ஓசியானிக் அணி வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான போட்டியில், இந்தியன் வங்கி அணி 88 - 61 என்ற புள்ளிக்கணக்கில், நாகன் நினைவு அணியை வீழ்த்தியது.

