/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்டோபஸ் மரைன் அணி கால்பந்து 'லீக்'கில் வெற்றி
/
ஆக்டோபஸ் மரைன் அணி கால்பந்து 'லீக்'கில் வெற்றி
ADDED : ஏப் 20, 2025 07:40 PM
சென்னை:சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, அயனாவரம் ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆக்டோபஸ் மரைன் அணி, டி.பி.ஒய்.சி., கீழ்பாக்கம் அணி மோதியது.
ஆக்டோபஸ் மரைன் அணி வீரர் மனோஜ், ஐந்தாவது நிமிடம்; ஜெய்கணேஷ் 22வது நிமிடம்; ரிக்கி பாரத் 28வது நிமிடம்; சிவகுமார் 62வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.
டி.பி.ஒய்.சி., கீழ்பாக்கம் அணிக்கு, அதன் வீரர் கிரிஷ் 83வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மட்டுமே கிடைத்தது. ஆக்டோபஸ் மரைன் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு முதல் டிவிஷன் போட்டியில், பேசின்பிரிட்ஜ், தாவூத் அணிகள் மோதின. 1 - 1 என்ற கோல் கணக்கில், ஆட்டம் டிராவில் முடிந்தது.
பேசின்பிரிட்ஜ் அணி வீரர் ஜீவிஸ் 20வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தாவூத் அணி சார்பில், வீரர் சந்தோஷ் 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.