ADDED : ஆக 08, 2025 12:10 AM

அம்பத்துார்,ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அம்பத்துார் சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில், ஒடிசா மாநிலம், நபரங்கப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ஹரிஜன், 26 ; என தெரிந்தது. இவர், ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா வாங்கி வந்து அம்பத்துார் சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.