/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் அலுவலக இடங்கள் 2026ல் 10 கோடி சதுர அடியாகும்
/
சென்னையில் அலுவலக இடங்கள் 2026ல் 10 கோடி சதுர அடியாகும்
சென்னையில் அலுவலக இடங்கள் 2026ல் 10 கோடி சதுர அடியாகும்
சென்னையில் அலுவலக இடங்கள் 2026ல் 10 கோடி சதுர அடியாகும்
ADDED : டிச 03, 2024 12:54 AM
சென்னை, டி
'சென்னையில் அலுவலக இடங்கள், 2026ல், 10 கோடி சதுர அடியாக அதிகரிக்கும்' என, சி.பி.ஆர்.இ., என்ற வணிக ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலுவலக இடங்கள் வளர்ச்சி, வர்த்தகம் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வரும் சி.பி.ஆர்.இ., நிறுவனம், தமிழகத்தில் திறன் மையங்கள் மற்றும் அலுவலக இடங்கள் குறித்த அறிக்கையை, சென்னையில் நேற்று வெளியிட்டது.
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் அலுவலக இடங்களின் இருப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டு நிலவரப்படி, 7.6 கோடி சதுர அடியாக உள்ள அலுவலக இடங்கள் இருப்பு, 2026ல், 10 கோடி சதுர அடியாக உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக, 'குளோபல் கேப்பப்பிலிட்டி சென்டர்'கள் எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள், சென்னையில் வெகுவாக அதிகரித்து வருகிறது.
சர்வதேச நிறுவனங்களின் திறன் மையங்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி, 250 ஆக உள்ள உலகளாவிய திறன் மையங்கள் எண்ணிக்கை, 2030ல், 460 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், அலுவலகஇடங்களின் இருப்பில், உலகளாவிய திறன் மையங்களின் பரப்பளவு, 3 கோடி சதுர அடியாக உயரக்கூடும். நாட்டில் பெங்களூருக்கு அடுத்தபடியாக, சென்னை உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்குவதில் முன்னேறி வருவதை இது காட்டுகிறது.
சென்னை மட்டுமல்லாது, கோவை, மதுரை, திருச்சி நகரங்களிலும், உலகளாவிய திறன் மையங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.