தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இடமாறுதலுக்கு ரேஷன் ஊழியர்களிடம் 'ஜிபே'யில் பணம் வசூலிக்கும் அதிகாரிகள்

 இடமாறுதலுக்கு ரேஷன் ஊழியர்களிடம் 'ஜிபே'யில் பணம் வசூலிக்கும் அதிகாரிகள்

 இடமாறுதலுக்கு ரேஷன் ஊழியர்களிடம் 'ஜிபே'யில் பணம் வசூலிக்கும் அதிகாரிகள்


ADDED : பிப் 04, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இடமாறுதலுக்கு, ரேஷன் கடை ஊழியர்களிடம், பண பரிமாற்ற செயலியான, 'ஜிபே' வாயிலாக அதிகாரிகள் பணம் வசூலிப்பதாக, ஆளுங்கட்சியான தி.மு.க., தொழிற்சங்கமே, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு, கடிதம் வாயிலாக புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து, பூங்கா நகர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிந்தாமணி சிறப்பங்காடியின், தி.மு.க.,வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., சார்பில், கூட்டுறவு துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:

பூங்கா நகர் பண்டகசாலை சிந்தாமணி வாயிலாக, 300 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது உள்ள மேலாண் இயக்குநர் செயலாட்சியர், ஊழியர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்.

அவருக்கு உறுதுணையாக பகுதி மேலாளர்கள், ஊழியர்களிடம் கடை மாற்றி தருவதாக ஒரு கடைக்கு, 50,000 ரூபாய் வீதம் மேல் கையூட்டு பெற்று, ஊழியர்களை இடமாற்றம் செய்து வருகிறார்.

அம்பத்துார் பகுதி மேலாளர், பண பரிமாற்ற செயலியான, 'ஜிபே' வாயிலாக பணம் பெற்றுள்ளார்.

கடந்த மாதம், 29ம் தேதி, ஒரு கடைக்கு, 50,000 ரூபாய் வீதம், 50 கடைகளுக்கு, 25 லட்சம் ரூபாய் பெற்று, இடமாற்றம் செய்ய ஆர்டர் தயார் செய்துள்ளார். இதனால், நியாயமாக பணிபுரியும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மேலாண் இயக்குநர் உஷா கூறுகையில், ''பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வெளியில் இருந்து என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்; எது, உண்மை என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us