/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்த விழுந்த ரயில்வே மேம்பாலம் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை
/
உடைந்த விழுந்த ரயில்வே மேம்பாலம் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை
உடைந்த விழுந்த ரயில்வே மேம்பாலம் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை
உடைந்த விழுந்த ரயில்வே மேம்பாலம் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜன 20, 2024 01:07 AM
சென்னை, ளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., துாரத்திற்கு, மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை, 500 மீட்டர் துாரத்தை இணைக்கும் கட்டுமான பணிகள் நடக்கின்றன.
அடுத்த சில மாதங்களில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவையை துவக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், 157 மற்றும் 158வது துாண்களுக்கு இடைய அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி பாரம் தாங்காமல், நேற்று முன்தினம் சரிந்து விழுந்தது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாலும், மேம்பால திட்டப் பணிகள் எதுவும் நடக்காதததாலும் நல்லவேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோர், தொகுதி எம்.எல்.ஏ.,வும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான அன்பரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., குழுவும் விரைவில் ஆய்வு நடத்த உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் உள்ள மேம்பால ரயில் மேம்பாலம், நேற்று முன்தினம் சரிந்து விபத்துக்குள்ளானது. பாலம் அமைக்கும் போது இரு துாண்களுக்கு இடையே, 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு விரைவில் இங்கு ஆய்வு நடத்த உள்ளது. விபத்து நடந்துள்ள இடம் மட்டும் இன்றி, இந்த தடத்தில் பணிகள் நடக்கும் மற்ற இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வின் அறிக்கை அடிப்படையில், வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். மேலும், சரிந்துள்ள பாலத்தை அகற்றி, பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.