/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் திருமுல்லைவாயிலில் தொடர் விபத்துகள்
/
சாலை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் திருமுல்லைவாயிலில் தொடர் விபத்துகள்
சாலை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் திருமுல்லைவாயிலில் தொடர் விபத்துகள்
சாலை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் திருமுல்லைவாயிலில் தொடர் விபத்துகள்
ADDED : டிச 27, 2024 12:43 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், ஏழாவது வார்டு, சுதர்சன் சாலை, திருமலைவாசன் நகரில், காவலர் குடியிருப்பு மற்றும் தனியார் குடியிருப்புகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தார் சாலை போடப்பட்டுள்ளது.
அதன்பின், வீடுகள் எண்ணிக்கை மற்றும் வாகன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், மார்ச் மாதம் ஒரு கி.மீ., துாரத்திற்கு தார் சாலை அமைக்க, மாநகராட்சியில் டெண்டர்விடப்பட்டு, பின் கைவிடப்பட்டது.
அதன்பின், புதைவட கேபிள் பதிக்க, மின்சார வாரியத்தால் சாலையில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. பின், தொடர்ந்து பெய்த கனமழையால், சாலை மோசமாகி மண் தரையாக காட்சியளிக்கிறது.
சாலையில் பள்ளம் தோண்டுவதற்காக, மின் வாரியத்திடம் ஆவடி மாநகராட்சி பணம் வசூலித்துள்ளது.
இருப்பினும், புதிய சாலை அமைக்காமல், பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால், பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலை மோசமாக உள்ளதால், அவசர ஊர்திகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.