/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ், மெட்ரோ, ரயில் பயண திட்டம் ஒரே டிக்கெட்டில் செயல்படுத்த தயார் முதல்வருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
/
பஸ், மெட்ரோ, ரயில் பயண திட்டம் ஒரே டிக்கெட்டில் செயல்படுத்த தயார் முதல்வருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
பஸ், மெட்ரோ, ரயில் பயண திட்டம் ஒரே டிக்கெட்டில் செயல்படுத்த தயார் முதல்வருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
பஸ், மெட்ரோ, ரயில் பயண திட்டம் ஒரே டிக்கெட்டில் செயல்படுத்த தயார் முதல்வருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
ADDED : செப் 14, 2025 10:56 PM
சென்னை:ஒரே டிக்கெட்டில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலியை துவக்குவதற்கு, முதல்வரிடம் தேதி கேட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
சென்னை பெருநகரில், அனைத்து பொது போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துவதில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது.
போக்குவரத்து திட்டங்களை, நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை, இக்குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகரில் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மாநகர பேருந்து சேவைகளில் மக்கள் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, 2023ல் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தனியார் மென்பொருள் நிறுவனம் மூலம் இதற்கான மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டது. இதை பதிவிறக்கம் செய்வோர், தங்கள் மொபைல் போன் வாயிலாக பயணத்தை திட்டமிட்டு, அதற்கான ஒருங்கிணைந்த டிக்கெட்டை பெறலாம்.
இது தொடர்பான க்யூ.ஆர்., குறியீடு மொபைல் போனுக்கு வந்துவிடும். இதை பயன்படுத்தி, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம்.
இதனால், ஒவ்வொரு சேவையை பயன்படுத்தும்போதும் தனித்தனியாக காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை.
ஆனால், இதற்கான மொபைல் போன் செயலியில், இவ்வாறு டிக்கெட் எடுக்கும்போது அதற்கான சேவை கட்டணமாக, டிக்கெட் தொகை மதிப்பில், 3.40 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.
இந்த கூடுதல் தொகையை யார் செலுத்துவது என்பதில், போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதற்கிடையே, ஒரே டிக்கெட் திட்டத்திற்கான மொபைல் போன் செயலியின் சோதனைகள் முடிந்துவிட்டன.
செயலிக்கு பெயர் சூட்டுவது, துவக்கி வைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, முதல்வரின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். முதல்வர் இதற்கு நேரம் ஒதுக்கும்போது இத்திட்டம் துவக்கி வைக்கப்படும் என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.