நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார் போலீசார், மாதனாங்குப்பம், ஆண்டாள் கோவில் தெருவிலுள்ள கிடங்கில் போலீசார் சோதனை நடத்திய போது, டேங்கர் லாரியில், 12,000 லிட்டர் இன்ஜின் ஆயில் இருந்தது.
உரிமம் மற்றும் ஆவணங்களின்றி, வடசென்னையில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதில் தொடர்புள்ள புத்தகரத்தைச் சேர்ந்த சிவகுமார், 43, சதீஷ், 40, தண்டையார் பேட்டை சந்திரசேகர், 32, ஆகியோரை கைது செய்த போலீசார், ஆயில் மற்றும் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.

