/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒக்கியம்மடு விரிவாக்கம் கூடுதல் இடம் ஆய்வு
/
ஒக்கியம்மடு விரிவாக்கம் கூடுதல் இடம் ஆய்வு
ADDED : நவ 13, 2024 02:33 AM

சோழிங்கநல்லுார்:ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடு மேற்கு பகுதியில், காங்., பிரமுகர் தங்கபாலுவின், 'தங்கவேல்' என்ற தனியார் கல்லுாரி உள்ளது.
இக்கல்லுாரிக்கு சொந்தமான, 6.70 ஏக்கர் இடத்தை நீர்வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்து, முதற்கட்டமாக, 2.50 ஏக்கர் இடத்தில் நீர்வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல், ஒக்கியம்மடுவின் கிழக்கு பகுதியில் கே.சி.ஜி., என்ற தனியார் கல்லுாரி உள்ளது. இதையொட்டி உள்ள, மணல் திட்டுகளை அகற்றி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பணிகளை,நேற்று மாலை, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ''80 மீட்டர் அகலத்தில் இருந்த கால்வாய், 130 மீட்டர் அகலமாக மாற்றப்படுகிறது. இதன் வாயிலாக, ஒக்கியம் மடுவில் 7,000 கனஅடி வெள்ளம் வெளியேறிய நிலையில், இனி, 12,000 கனஅடி வெள்ளம் வெளியேறும். இந்த இரு பணிகளும், மூன்று, நான்கு நாட்களில் முடியும்,'' என்றார்.