/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய பேட்டரி வாகனங்கள்
/
சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய பேட்டரி வாகனங்கள்
சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய பேட்டரி வாகனங்கள்
சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய பேட்டரி வாகனங்கள்
ADDED : மார் 10, 2026 05:26 AM

திருவொற்றியூர்: மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழைய பேட்டரி வாகனங்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. 87,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், தினசரி 1.75 லட்சம் கிலோ மக்கும், மக்கா மற்றும் அபாயகரமான குப்பை சேகரமாகின்றன.
இதற்காக, தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில், 300-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றில் பல உடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தன.
எனவே, அந்த பேட்டரி வாகனங்களுக்கு பதிலாக, புதிய பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, பயன்படுத்த முடியாத அந்த பழைய பேட்டரி வாகனங்கள், மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் ஒரு பக்கம் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதி மது, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அந்த பேட்டரி வாகனங்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

