ADDED : நவ 12, 2024 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே டிராக் அருகே சோதனை நடத்தினர்.
அப்போது திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த சந்திரா என்கிற ஆஷா, 63, என்ற மூதாட்டி, 4 கிலோ கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இவர் மீது, நான்கு வழக்குகள் உள்ளன.