/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவரின் ரூ.726 பென்ஷனுக்காக மூதாட்டிக்கு உரிமைத்தொகை மறுப்பு
/
கணவரின் ரூ.726 பென்ஷனுக்காக மூதாட்டிக்கு உரிமைத்தொகை மறுப்பு
கணவரின் ரூ.726 பென்ஷனுக்காக மூதாட்டிக்கு உரிமைத்தொகை மறுப்பு
கணவரின் ரூ.726 பென்ஷனுக்காக மூதாட்டிக்கு உரிமைத்தொகை மறுப்பு
ADDED : ஜூலை 17, 2025 12:20 AM

சென்னை,
திருவொற்றியூர், அம்பத்துாரில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், மகளிர் உரிமை தொகை, பட்டா மற்றும் முதியோர் உதவி தொகை கோரி, அதிக விண்ணப்பங்கள் குவிந்தன.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் முதலாவது வார்டுக்கான, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், எண்ணுார் - வியாபாரி சங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், கலைஞர் உரிமை தொகை கோரி, 747 மனுக்கள்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 137 உட்பட, 1,150 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
l அம்பத்துார் மண்டலம், 79வது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்கான முகாம், அம்பத்துார் -- செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக 2,858 பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைக்கு, 2,044 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மூதாட்டி தவிப்பு
அம்பத்தூர் மண்டலம், 79வது வார்டு, ஒரகடம், காந்தி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 75. தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோமதி, 66.
அவருக்கு மாதம், 726 ரூபாய் பென்ஷனாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், அவரது மனைவி கோமதி பெயரில், ஏற்கனவே இரண்டு முறை விண்ணப்பித்துள்ளார்.
அவர் பென்ஷன் வாங்குவதால், அவரது மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மூன்றாவது முறையாக, அவர் மகளிர் உரிமைத்தொகைக்கு நேற்று விண்ணப்பித்துள்ளார்.

