/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5வது மாடியில் இருந்து விழுந்த மூதாட்டி பலி
/
5வது மாடியில் இருந்து விழுந்த மூதாட்டி பலி
ADDED : பிப் 18, 2024 12:08 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பி.கே.காலனி, ஐந்தாவது மாடி, 10வது பிளாக்கை சேர்ந்தவர் சந்திரா, 85. உடல்நிலை சரியில்லாமல் இருந்த சந்திராவுக்கு, நான்காவது மகளான கண்ணகி குடும்பத்தினர், தினமும் உணவு கொடுத்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை, வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள பால்கனியிலிருந்து தவறி விழுந்து உள்ளார். அங்கிருந்தோர், சந்திராவை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய புளியந்தோப்பு போலீசார், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக, சந்திராவின் உடலை வைத்துள்ளனர். சந்திராவின் மகளான கண்ணகி, புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.