/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு சிறை
/
ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு சிறை
ADDED : ஜன 05, 2026 05:51 AM
சென்னை: ஆம்னி பேருந்தை அலட்சியமாக ஓட்டி, வாலிபரின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஓட்டுநருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 49; ஆம்னி பேருந்து ஓட்டுநர். இவர், 2024, மே 11ம் தேதி, அசோக் நகரில் உள்ள 100 அடி சாலையில், தனியார் ஆம்னி பேருந்தை அலட்சியமாக ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதில், விஜயகுமார், 29, என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, கிண்டி போக்குவரத்து போலீசார், சிவகுமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சியங்களுடன் குற்றம் நிரூபணமானதால், ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிவகுமாருக்கு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

