ADDED : மார் 21, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, லோக்சபா தேர்தலில் போட்டியிட, சென்னையில் நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்று துவங்கியது. வடசென்னை பகுதியில், தாக்கம் கட்சி வேட்பாளர் அஜித்குமார், சுயேட்சை வேட்பாளர் மாரிமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய சென்னையில் நாம் தமிழ் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன், தாக்கம் கட்சி வேட்பாளர் செல்வ குமார் ஆகிய இருவர் தாக்கல் செய்துள்ளனனர்.
தென்சென்னை தொகுதியில் யாரும் நேற்று மனு தாக்கல் செய்யவில்லை. அதன்படி, முதல் நாளில், நான்கு பேர் சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

