/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
350 மதுபாட்டில் கடத்தல் மாதவரத்தில் ஒருவர் கைது
/
350 மதுபாட்டில் கடத்தல் மாதவரத்தில் ஒருவர் கைது
ADDED : ஜூலை 06, 2025 12:16 AM

மாதவரம், மாதவரத்தில் ஆட்டோவில் கடத்தப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்து, கடத்திய நபரை கைது செய்தனர்.
சென்னையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம், புழல், காந்தி பிரதான சாலை, புவனேஷ்வரி நகர் முதல் தெரு சந்திப்பில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்ட போது, அதில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டி வந்த மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த ஸ்டாலின், 54, என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவர் அளித்த தகவலின்படி, புழல் பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த, 750 மில்லி மற்றும் 1 லிட்டர் அளவுள்ள 350 வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
ஸ்டாலின், நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.