/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
ADDED : அக் 20, 2025 04:46 AM
கோயம்பேடு: பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், பூ அலங்கார வேலை செய்யும் நபர் உயிரிழந்தார்.
தாம்பரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சாணக்கியன், 50; பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு, 100 அடி சாலையில் 'டி.வி.எஸ்., ஜெஸ்ட்' ஸ்கூட்டரில் வடபழனி நோக்கி சென்றார்.
அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து, பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சாணக்கியன் மீது அரசு பேருந்து ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ஜெகநாதன், 51, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.