UPDATED : அக் 01, 2026 02:46 PM
ADDED : அக் 01, 2026 11:30 AM
அ நிறம் | அளவு
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அஜித், 26.
கடந்த 29ம் தேதி இரவு அஜித்தின் வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள், அஜித்தை வெளியே அழைத்து சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த மூவர், அவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஐஸ்ஹவுஸ் போலீசார், கொலையாளிகளான ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், 23 உட்பட மூவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்த நிலையில், நேற்று ராயப்பேட்டையைச் ஹரிஷ், 25 என்பவர் கைது செய்யப்பட்டார்.
