/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து சேலையூரில் ஒருவர் பலி
ADDED : ஏப் 15, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தை சேர்ந்தவர் டோமினிக் பிரேம்குமார், 53. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த அவர், கழிப்பறைக்கு சென்றார். திரும்பி வந்த போது, வீட்டு சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
சத்தம் கேட்டு, அவரது மனைவி லில்லி வெளியே வந்து பார்த்தபோது, கணவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது.
தீயணைப்பு துறையினர் விரைந்து, பலத்த காயமடைந்த டோமினிக் பிரேம்குமாரை வெளியே துாக்கினர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.