ADDED : நவ 21, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை: படப்பை அடுத்த ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50. கூலித்தொழிலாளி. நேற்று, அதே பகுதியை சேர்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன், குத்தனுார் ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.
சங்கர் ஏரி நீரில் இறங்கி வலை வீசிய போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார். சங்கரை காப்பாற்ற சென்ற மற்ற இருவரும், ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகில் சென்று ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் மீட்டனர். இரண்டு மணி நேரம் தேடி, சங்கர் உடலை மீட்டனர்.

