/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் பறித்த ஒருவர் விபத்தில் பலி: மற்றொருவர் கைது
/
மொபைல் போன் பறித்த ஒருவர் விபத்தில் பலி: மற்றொருவர் கைது
மொபைல் போன் பறித்த ஒருவர் விபத்தில் பலி: மற்றொருவர் கைது
மொபைல் போன் பறித்த ஒருவர் விபத்தில் பலி: மற்றொருவர் கைது
ADDED : ஜூலை 31, 2025 12:46 AM
திருமங்கலம், அண்ணா நகரில் மொபைல் போன் பறித்த ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 36. எலக்ட்ரீஷியன். இவர், அண்ணா நகர் மேற்கு பகுதியில் தங்கி பணி புரிகிறார்.
கடந்த 27ம் தேதி, அண்ணா நகர் மேற்கு, மில்லீனியம் பூங்கா அருகில் சரவணன் நடந்து சென்றார். அப்போது, எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போனை பறித்து தப்பினர்.
இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்து, ஓட்டேரியை சேர்ந்த மேகசூர்யா, 26, என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று மேகசூர்யா மற்றும் அவரது நண்பரான கணேசன் ஆகியோர், சரவணனிடம் மொபைல் போன் பறித்துள்ளார்.
பின், மேகசூர்யா வீட்டிற்கு சென்ற நிலையில், கணேசன் மொபைல் போனுடன் இருசக்கர வாகனத்தில், கும்மிடிப்பூண்டி அருகில், வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிந்தது.
மேகசூர்யா மீது கொலை முயற்சி உட்பட 15 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று, சமீபத்தில் வெளியில் வந்ததும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின், மேகசூர்யாவை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.