/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைன் விண்ணப்ப பதிவு சி.எம்.டி.ஏ.,வில் பாதிப்பு
/
ஆன்லைன் விண்ணப்ப பதிவு சி.எம்.டி.ஏ.,வில் பாதிப்பு
ADDED : நவ 17, 2024 10:39 PM
சென்னை:சி.எம்.டி.ஏ.,வில், 'ஆன்லைன்' வசதிக்கான இணையதளத்தில் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விண்ணப்ப பதிவு பாதிக்கப்பட்டு உள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளும், ஒற்றை சாளர முறை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. கட்டுமான திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நில வகைப்பாடு மாற்றம், தொழில்முறை வல்லுனர் பதிவு போன்ற பணிகள், இத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு இணையதள சர்வரில், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகள் காரணமாக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்ப பதிவு பணிகள் பாதிக்கப்பட்டதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
'சர்வர்' பணிகள் முடிக்கப்பட்டு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இணையதளம், இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.