/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 பூங்காக்களில் ரூ.80 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
/
5 பூங்காக்களில் ரூ.80 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
5 பூங்காக்களில் ரூ.80 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
5 பூங்காக்களில் ரூ.80 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
ADDED : மே 03, 2025 11:50 PM
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக, உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என, மாநகராட்சியின் 2025 - 26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை அடிப்படையாக கொண்டு, மண்டலம் - 1ல் அடங்கிய பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிகளில் உள்ள ஐந்து பூங்காக்களில், இளைஞர்கள் மற்றும் முதியோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வசதியாக, 80 லட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.
அனகாபுத்துார் லட்சுமி நகர், கல்மடுவு, பம்மல் எஸ்.பி.ஐ., காலனி, அருள்பாண்டியன், திருநீர்மலை சந்திரன் நகர் ஆகிய பூங்காக்களில், தலா 16 லட்சம் ரூபாய் செலவில், இந்த பயிற்சி கூடம் அமையவுள்ளது.