/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறந்தவெளி கழிப்பிடமில்லா சென்னை ஒரு மாத விழிப்புணர்வு விழா துவக்கம்
/
திறந்தவெளி கழிப்பிடமில்லா சென்னை ஒரு மாத விழிப்புணர்வு விழா துவக்கம்
திறந்தவெளி கழிப்பிடமில்லா சென்னை ஒரு மாத விழிப்புணர்வு விழா துவக்கம்
திறந்தவெளி கழிப்பிடமில்லா சென்னை ஒரு மாத விழிப்புணர்வு விழா துவக்கம்
ADDED : ஜூன் 05, 2025 12:32 AM

சென்னை :''சென்னையில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பணி துவக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படும்,'' என, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
சென்னை மாநகராட்சியுடன், 'வாஷ் லேப், சியர், ரீசைக்கிள் பின்' ஆகிய அமைப்புகள் இணைந்து, 'சர்வதேச கழிப்பறை திருவிழா - 3.0' வை நடத்துகின்றன.
ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு மாத விழிப்புணர்வு திருவிழாவை துவக்கி வைத்த, மேயர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 416 இடங்களில், 1,400க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் உள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளிகளில் சிறுநீர், மலம் கழித்தல் ஆகிய இடங்கள் கண்டறிந்து, வரைப்படமாக்கப்பட உள்ளது.
அங்கு, திறந்தவெளியை பயன்படுத்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தேவைப்பட்டால் கூடுதலான எண்ணிக்கையில் கழிப்பறை கட்டித் தரப்படும்.
அத்துடன், கழிப்பறையை தத்தெடுத்தல், புதிதாக அமைத்து தருதல், பராமரிக்க பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் என, பல செயல்படுத்தப்பட உள்ளன.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கழிப்பறை குறித்து, ஊடகவியாலர்கள், கல்வி நிறுவனங்கள், சமூக செயற்பட்டாளர்கள், உரையாடல்கள் வாயிலாக தீர்வு ஏற்படுத்தப்படும். கழிப்பறைகளில் குற்ற செயல்களை தடுக்க, அவற்றின் நுழைவு வாயில்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.