ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் பெலாரஸ் வீரர் 'சாம்பியன்'
ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் பெலாரஸ் வீரர் 'சாம்பியன்'
ADDED : ஜன 10, 2026 05:32 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி, எழும்பூரில் நேற்று நிறைவடைந்தது. 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
நேற்று வரை நடந்த அனைத்து போட்டிகள் முடிவில், பெலாரஸ் வீரர் அலெக்ஸாண்ட்ரோவ் அலெக்ஸேஜ் 8.5 புள்ளிகளில் முன்னிலை பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றார்.
அவரை தொடர்ந்து, தமிழக வீரர்கள் ரோஹித் கிருஷ்ணா, ஸ்ரீஹரி, பெலாரஸ் வீரர் பெடோரேவ் அலெக்ஸி, உ.பி., வீரர் அர்னாவ் அகர்வால், வியட்நாம் வீரர் நுயென் டக் ஹோவா, தலா 8 புள்ளிகள் பெற்று, முறையே அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.
