ஓபன் சர்வதேச பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
ஓபன் சர்வதேச பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
ADDED : மே 27, 2025 12:18 AM

அ நிறம் | அளவு
சென்னை, ஆஸ்திரியா ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி, ஆஸ்திரியாவில் உள்ள ஹூட்டன்பிரன்னர்காஸில் கடந்த 22ல் துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது.
போட்டியில், இந்தியா சார்பில், சென்னை எஸ்.ஆர்.எம்., மாணவி ஆலிஷா நாயக் பங்கேற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், காலிறுதியில் இந்திய வீராங்கனை சாலிஹாவையும், அரையிறுதியில் சீனாவின் லியோவேவையும் தோற்கடித்தார்.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், டென்மார்க் வீராங்கனை அமலி ஷூல்ஸிடம் மோதி தோல்வியடைந்த ஆலிஷா நாயக், வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
