/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு திறப்பு
/
புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஆக 05, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், 50வது வார்டு, ரங்கநாதபுரத்தில் மின்பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால் வீடுகளில் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல், மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
மின் பற்றாக்குறையை தீர்க்க, ரங்கநாதபுரம் இரண்டாவது தெருவில், 100 கி.வோல்ட்., திறனில் மின் மாற்றி அமைக்கப்பட்டு, நேற்று பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.