/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
/
ரூ.5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
ADDED : டிச 23, 2025 04:55 AM
பரங்கிமலை: பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம், கோவிலம்பாக்கம் ஊராட்சிகளில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு ஆய்வகங்கள் மற்றும் 16 வகுப்பறைகள் உள்ளடங்கிய கட்டடம், நேற்று பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், பள்ளி மாணவ - மாணவியர் கையால் ரிப்பன் வெட்டச்செய்து, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
குறிப்பிட்ட இரு பள்ளிகளிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறைகள் தேவை என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, இரு பள்ளிகளிலும், தலா 894.45 சதுர அடி பரப்பளவில், தலா 2.50 கோடி மதிப்பில் 16 வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள் அடங்கிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

