/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நித்ய அமிர்தம் ஹோட்டல் திருவள்ளூரில் திறப்பு
/
நித்ய அமிர்தம் ஹோட்டல் திருவள்ளூரில் திறப்பு
ADDED : ஜன 08, 2024 01:26 AM

திருவள்ளூர்:சென்னை, அரும்பாக்கத்தில் 2010ல் 'நித்ய அமிர்தம் ஸ்வீட்ஸ் ஸ்டால்' திறக்கப்பட்டு, படிப்படியாக ஹோட்டலாக மாறியது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 10 இடங்களில் நித்ய அமிர்தம் ஹோட்டலின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக சாலையில், 11வது கிளை திறப்பு விழா நடந்தது. இதன் நிர்வாக இயக்குனர் கே.பார்த்திபன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, புதிய ஹோட்டல் மற்றும் 'பார்ட்டி ஹால்' ஆகியவற்றை திறந்து வைத்தார்.
முழுக்க குளிரூட்டப்பட்ட இந்த புதிய கிளையில், தரமான சைவ உணவு வகைகள், இளநீர், கருப்பட்டி பாயசம் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு உள்ளன.
முதல் மாடியில், 200 பேர் அமரும் வகையில், 'பார்ட்டி ஹால்' திறக்கப்பட்டுள்ளதாக, நித்ய அமிர்தம் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார்.