sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு

/

விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு

விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு

விளையாட்டு அரங்கம், பள்ளி கட்டடங்கள் திறப்பு


ADDED : மே 29, 2025 11:52 PM

Google News

ADDED : மே 29, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சென்னையில் விளையாட்டு அரங்கம், பள்ளிக்கட்டடங்கள் உள்ளிட்டவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில், பல்வேறு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அதன் விபரம்:

* மாத்துார் எம்.எம்.டி., 59வது தெருவில், தொடக்க பள்ளிக்கு புதிய கட்டடம்; மாதவரம் பாரதியார் தெரு மேல்நிலை பள்ளியில், நான்கு வகுப்பறைகள், இரு கழிப்பறைகள் கட்டும் பணி உள்ளிட்ட பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன

* அடையாறு திருவள்ளுவர் நகர், 7வது குறுக்கு தெருவில், 1.47 கோடி ரூபாய் செலவில் கபடி மைதானம், இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், பெண்கள் உடற்பயிற்சி கூடம், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது

* மாதவரம் பரப்பன்குளத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா என, 30.60 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற, 11 திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன

* பள்ளிக்கரனை, முகலிவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய விரிவான பாதாள சாக்கடை திட்டங்கள், 188.55 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்துள்ளன

முடிவுற்ற இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, தலைமை செயலகத்தில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.

* சென்னை மாநகராட்சிக்கு இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கும், ஆறு நீர் தெளிக்கும் வாகனங்கள், மரக்கிளைகள் அகற்றும், ஆறு ஹைட்ராலிக் இயந்திரங்கள் என, 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான, 50 புதிய வாகனங்களின் செயல்பாட்டையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

* பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாலிபுரம் சாலையை இணைக்கும் வகையில், வெங்கடேசபுரம் - இளங்கோ நகரில் புதிய பாலம்; காமராஜர் சாலை, வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது

* சோழிங்கநல்லுார் மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே, பாண்டியன் தெரு, அண்ணா நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இவை உட்பட, 59.60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

***






      Dinamalar
      Follow us