ADDED : பிப் 06, 2026 05:48 AM

அ நிறம் | அளவு
சென்னை: தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கத்தில் காதர் நவாஸ்கான் சாலையை மேம்படுத்த 19.81 கோடி ரூபாய், மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 500 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை மற்றும் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக 70 லட்சம் ரூபாய் செலவில் கிரானைட் கற்களால் சாலை, 300 இருக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
பாண்டி பஜாரில் உள்ள நடைபாதைபோல், இவ்வளாகமும் அமைக்கப்பட்டு உள்ளது; 24 மணி நேரமு ம் கடைகள் செயல்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
