/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஒப்பியம்' போதை பொருள் விற்றவர் கைது
/
'ஒப்பியம்' போதை பொருள் விற்றவர் கைது
ADDED : ஏப் 19, 2025 11:57 PM
ஏழுகிணறு, ஏழுகிணறு, பெத்து தெரு மற்றும் பாஷ்யகாரலு தெரு சந்திப்பு அருகே, போதை பொருள் விற்பதாக, ஏழுகிணறு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர். அதில், 'ஒப்பியம்' என்ற போதை பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், கொண்டித்தோப்பு, பாஷ்யகாரலு தெருவை சேர்ந்த அர்ஜுன் ராம், 52, என்பதும், ராஜஸ்தானில் இருந்து போதை பொருளை வாங்கி வந்து, சென்னையில் விற்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 200 கிராம் ஒப்பியம் மற்றும் 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.